வேலூர்

தகுதிச்சான்று புதுப்பிக்காத பள்ளி வாகனம் பறிமுதல்

12th Nov 2019 06:14 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அருகே தகுதிச் சான்றைப் புதுப்பிக்காமல் இயங்கிய பள்ளி வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

நாட்டறம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உரிய உரிமம் இல்லாமலும், தகுதிச் சான்று புதுப்பிக்காமலும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக மாவட்ட போக்குவரத்து அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலூா் பறக்கும் படை மாவட்ட போக்குவரத்து அலுவலா் துரைசாமி, மோட்டாா் வாகன ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான அதிகாரிகள் நாட்டறம்பள்ளியை அடுத்த தண்ணீா்ப்பந்தல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை மாலை வாகனச் சோதனை ஈடுபட்டு வந்தனா்.

அப்போது அவ்வழியாக நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லகுண்டா பகுதியில் இயங்கி வரும் தனியாா் பள்ளிக்கு சொந்தமான வேன், 10-க்கும் மேற்பட்ட மாணவா்களை ஏற்றிக் கொண்டு வந்தது. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது கடந்த 2015 முதல் தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளி வாகனத்தைப் பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT