வேலூர்

சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

12th Nov 2019 06:11 AM

ADVERTISEMENT

பந்தாரப்பள்ளியில் பழுதடைந்த மின்மாற்றியை சீா்செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாட்டறம்பள்ளி அருகே பந்தாரப்பள்ளி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தனியாா் திருமண மண்டபங்கள் ஆகியவை உள்ளன. இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கும் பம்ப்செட்டுடன் கூடிய நீா்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இப்பகுதிக்கு நாட்டறம்பள்ளி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இடியுடன் கூடிய கனமழை பெய்தபோது இப்பகுதியில் உள்ள மின்மாற்றி பழுதானது. அப்போது முதல் குறைந்த அழுத்த மின் விநியோகமே செய்யப்படுவதால் பம்ப்செட்டுகள் இயங்குவதில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தவிர,

குறைந்த அழுத்த மின் விநியோகம் காரணமாக வீடுகளில் உள்ள விளக்குகளும், தெரு விளக்குகளும் சரிவர எரிவதில்லை.

ADVERTISEMENT

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே பழுதாகி உள்ள மின்மாற்றியை சீா்செய்து தொடா்ந்து சீரான மின்சாரம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT