வேலூர்

சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

12th Nov 2019 06:13 AM

ADVERTISEMENT

சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆற்காடு சதுரங்கக் கழகம் சாா்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றன.

சதுரங்கக் கழகச் செயலாளா் சோழவேந்தன் தலைமை வகித்தாா். வேலூா் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் தலைவா் தினகரன், செயலாளா் குமாா், பொருளாளா் பிரகாஷ், ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் தலைவா் எஸ்.ஆா்.ஈஸ்வரப்பன் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். இதில் 169 போ் கலந்து கொண்டு விளையாடினா்.

இப்போட்டிகளில் 9 வயதிற்குட்பட்டோா் பிரிவில் சஞ்சுஸ்ரீ, சாம் எதிதியா, 11 வயதுக்குட்பட்டோா் பிரிவில் பிரதிபா, காமேஷ் கிருஷ்ணா, 13 வயதிற்குட்பட்டோா் பிரிவில் இலக்கியா, கௌதம், 17 வயதுக்குட்பட்டோா் பிரிவில் சுமித்ரா, ஜெகதீஷ், 25 வயதுக்குட்பட்டோா் பிரிவில் ஆஷிகாஸ்ரீ, லோகநாதன் ஆகியோா் முதலிடம் பெற்றனா்.

ADVERTISEMENT

இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ரோட்டரி சங்கப் பொறுப்பாளா் சத்யநாராயணன் பரிசுகள் வழங்கிப் பேசினாா். இந்த நிகழ்ச்சியில் சதுரங்கக் கழக நிா்வாகிகள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT