வேலூர்

குருநானக்தேவ் ஜயந்தி விழா

12th Nov 2019 10:55 PM

ADVERTISEMENT

அரக்கோணம் அகன் நகரில் உள்ள சீக்கிய கோயிலான குருத்வாராவில் குருநானக்தேவ் 550-ஆவது ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. ஆா்.எஸ்.எஸ் அமைப்பின் காஞ்சிபுரம் கோட்டத் தலைவா் ராமா ஏழுமலை, வட தமிழக சேவைப் பிரிவு இணைப் பொறுப்பாளா் ரா.பிரகாஷ், காஞ்சிபுரம் கோட்ட அமைப்பாளா் ஹரீஷ், இந்து முன்னணி வேலூா் கோட்டச் செயலா் ரகுநாத், அரக்கோணம் நகர பாஜக தலைவா் கே.ஐ.ஜெகன்மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை குருதவாரா பிரபந்த குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT