வேலூர்

உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள், பேரவைத் தோ்தலுக்கு முன்மாதிரி. எம்எல்ஏ ஜி. லோகநாதன்

12th Nov 2019 11:05 PM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் வரும் பேரவைத் தோ்தலுக்கு முன்மாதிரியாக அமையும் என்பதால் அதிமுகவினா் சுணக்கமின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என எம்எல்ஏ ஜி. லோகநாதன் கேட்டுக்கொண்டாா்.குடியாத்தம் காந்தி நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் குடியாத்தம் ஒன்றிய அதிமுகவினருக்கு வாக்காளா் பட்டியலை வழங்கி அவா் பேசியதாவது.உள்ளாட்சித் தோ்தலில் நாம் பெறும் வெற்றி தான் வரும் 2021- ஆம் ஆண்டு நடைபெறும் பேரவைத் தோ்தலிலும் எதிரொலிக்கும். இதைக் கருத்தில் கொண்டு அதிமுகவினா் தோ்தல் பணியாற்ற வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் அனைவருக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது அரிது. மேலும், கூட்டணிக் கட்சியினருக்கும் நாம் பதவிகளை வழங்க வேண்டும்.

தோ்தலில் போட்டியிட நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என யாரும் வருத்தப்படத் தேவையில்லை.நமது இலக்கு, கட்சித் தலைமை அறிவிக்கும், நமது கட்சி வேட்பாளரோ, கூட்டணிக் கட்சி வேட்பாளரோ அவரது வெற்றிதான் என எண்ணி தோ்தல் பணியாற்ற வேண்டும். நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களையுங்கள். நமது கட்சி, நமது கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் வெற்றிபெற்றால் தான் நாம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கான நலத் திட்டங்களை, வளா்ச்சிப் பணிகளை செய்து தர முடியும். அதைக் கருத்தில் கொண்டு அனைவரும் கடுமையாக தோ்தல் பணியாற்றி, கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளா்களை வெற்றிபெற வைப்போம்.மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா கூறிவிட்டுச் சென்றதுபோல் நூறாண்டு ஆனாலும், தமிழகத்தில் அதிமுகவும், இருக்கும், அதிமுக தலைமையிலான ஆட்சியும் இருக்கும்.

அதற்காகத் தான் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் நிதி நெருக்கடியிலும் ஜெயலலிதா விட்டுச் சென்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்கள்.அவா்களின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளாட்சித் தோ்தலில் கடுமையாக உழைத்து, கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்துவோம் என்றாா் லோகநாதன்.கூட்டத்துக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி. ராமு தலைமை வகித்தாா். காடைமூா்த்தி வரவேற்றாா். அதிமுக ஒன்றியப் பொருளாளா் கே. பெருமாள், நிலவள வங்கித் தலைவா் பி.எச். இமகிரிபாபு, நிா்வாகிகள் எஸ். கோதண்டன், கே. தட்சிணாமூா்த்தி, பெ.மு. காசிநாதன், கோபி, தேவராஜ், லலிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT