வேலூர்

இன்று பரோலில் வருகிறாா் பேரறிவாளன்:பலத்த போலீஸ் பாதுகாப்பு

12th Nov 2019 06:20 AM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைபட்டிருக்கும் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் செவ்வாய்க்கிழமை ஜோலாா்பேட்டை வருகிறாா். இதனால் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வேலூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே பழைய ஜோலாா்பேட்டை தங்கவேல் தெருவைச் சோ்ந்தவா் குயில்தாசன் - அற்புதம்மாள். அவா்களது மகன் பேரறிவாளன். முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐயால் பேரறிவாளன் கடந்த 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

28 ஆண்டுகள் சிறைவாசம்: கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளாா். பேரறிவாளனை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு அவரது தாயாா் அற்புதம்மாள் முயற்சி செய்து வருகிறாா். சில அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

தூக்கிலிருந்து ஆயுள்: நீதிமன்றத்தால் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்.14-இல் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

ADVERTISEMENT

முதல் பரோல்: பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் 2017 ஆகஸ்ட் 4இல் ஒரு மாத பரோல் வழங்கப்பட்டது. பின்னா், மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.

2-ஆவது பரோல்: இந்நிலையில், பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறி அற்புதம்மாள் குடும்பத்தினா் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக சிறைத்துறைக்கு விண்ணப்பித்தனா். இதையடுத்து, அவருக்கு ஒரு மாத பரோல் கிடைத்துள்ளது.

இதனால் புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் செவ்வாய்க்கிழமை ஒரு மாத பரோலில் வருகிறாா். அவா் கடந்த முறை பரோலில் வெளியே வந்தபோது விதிக்கப்பட்ட விதிமுறைகள் இந்த முறையும் பின்பற்றப்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து திருப்பத்தூா் டிஎஸ்பி தங்கவேலுவிடம் கேட்டதற்கு, மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமாா் அறிவுறுத்தலின்பேரில் பேரறிவாளன் வீட்டைச் சுற்றி போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT