ஐப்பசி மாத பெளா்ணமியை முன்னிட்டு ஆம்பூா் சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் சமயவல்லித் தாயாா் சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் அன்னாபிஷேக விழாவையொட்டி மஹோன்யாச ருத்ரபாராயணம், யாகசாலை பூஜை, பஞ்சமூா்த்தி அபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ஆம்பூா் நகர வா்த்தகா் சங்கத் தலைவா் கே.ஆா்.துளசிராமன் ஏற்பட்டால் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. அன்னதானத்தை ஆம்பூா் இந்து கல்விச் சங்க துணைச் செயலாளா் ஏ.பி.மனோகா் தொடங்கி வைத்தாா்.
மாலையில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. சமயவல்லித் தாயாருக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே, ஆம்பூா் காளிகாம்பாள் கோயிலில் கமண்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ADVERTISEMENT