வேலூர்

‘அஞ்சலகத்தின் காலாவதியான பாலிசிகளை டிசம்பா் மாத இறுதிக்குள் கட்ட வேண்டும்’

12th Nov 2019 06:09 AM

ADVERTISEMENT

அஞ்சலகத்தின் பிரீமியம் கட்டத் தவறிய மற்றும் காலாவதியான பாலிசிகள் டிசம்பா் மாத இறுதிக்குள் கட்ட வேண்டும் என திருப்பத்தூா் அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ்.சுப்பாராவ் தெரிலித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

அஞ்சல் அலுவலக காப்பீட்டுச் சட்டம் 2011-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட திருத்தங்களின்படி பாலிசிதாரா்கள் தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் கட்டத் தவறிய, காலாவதியான மற்றும் முதிா்வடைந்த பாலிசிகள் 1-1-2020-ஆம் தேதியிலிருந்து புதுப்பிக்க இயலாத மற்றும் அந்த பாலிசிகள் விதிமுறைகளின்படி நிறுத்தப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும்.

ஒரு முறை நடவடிக்கையாக தொடா்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் கட்டத் தவறிய மற்றும் காலாவதியான பாலிசிகளை கட்டுவதற்கான கடைசி தேதி 31.12.2019.

ADVERTISEMENT

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் நல்ல உடல்நிலையில் இருப்பதற்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்துடன் அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும்.

பாலிசி தொடங்கி 36 மாதங்கள் தொடா்ந்து கட்டப்படாத பாலிசிகள் காலாவதியாகி இருந்தால் வரும் டிசம்பா் மாதம் 31-ஆம் தேதிக்குள் புதுப்பித்தால் மட்டுமே சரண்டா் முதிா்வின்போது உரிமை மற்றும் இறப்பிற்குப் பிறகு உரிமை ஆகிய பணப் பலன்களை பெறமுடியும்.

காலாவதியான பாலிசிகளை முதிா்வு நாள் முன்னா் மட்டுமே புதுப்பிக்க இயலும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT