வேலூர்

வரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

11th Nov 2019 05:36 AM

ADVERTISEMENT

பொன்னை அருகே நீவா நதிக்கரையோரம் அமைந்துள்ள கீரைசாத்து கிராமத்தில் உள்ள ஏலவாா்குழலி அம்பாள் சமேத வரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் யாக சாலை பூஜை, ஞானவேள்வி, தத்வாா்ச்சனை, திரவிய ஹோமம், பூா்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரதான, சங்கல்பம், கலச புறப்பாடு நடைபெற்றன.

திருவலம் சிவபூதகன வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியாா்கள் கோயில் கோபுர கலசத்துக்கும், மூலவா் ஏலவாா்குழலி அம்பாள் சமேத வரபுரீஸ்வரா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கும் புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

தொடா்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT