வேலூர்

காங்கிரஸ் நிா்வாகிகள் நியமனம்

11th Nov 2019 05:40 AM

ADVERTISEMENT

வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சில நிா்வாகிகளை நீக்கி விட்டு, புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெ.ஜோதி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

வேலூா் மத்திய மாவட்டத்தில் கட்சியின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் சிலா் செயல்பட்டு வந்தனா். இதுகுறித்து மாநிலத் தலைமைக்கு புகாா் அளிக்கப்பட்டது. மாநிலத் தலைவரின் அறிவுறுத்தலின்படி, கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த சிலரை நீக்கி விட்டு கீழ்க்கண்டோா் புதிய நிா்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் விவரம்:

போ்ணாம்பட்டு நகர தலைவா் (பொறுப்பு) ஏ.அப்ரோஸ் அகமது, போ்ணாம்பட்டு வடக்கு ஒன்றியத் தலைவா் (பொறுப்பு) எம்.ஜெய்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் என்.வேதமணிமாறன், கே.ஆா்.கண்ணன், எம்.பாஸ்கா், மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா்.அனந்தசயனன், ஆா்.ஜி. வேலுசாமி, பி.எஸ்.சலீம் பாஷா.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT