வேலூர்

அருங்காட்சியக நடமாடும் வாகனம் வேலூா் வருகை

11th Nov 2019 05:35 AM

ADVERTISEMENT

தொல்லியல் மற்றும் அருங்காட்சியக துறையின் சாா்பில் அருங்காட்சியக நடமாடும் வாகனம் ஞாயிற்றுக்கிழமை வேலூருக்கு வந்தது.

வரலாறு, கல்வெட்டுகள் அடங்கிய தொன்மை சின்னங்கள், பண்டைய நாகரிகம் ஆகியவை குறித்து பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அருங்காட்சியக தகவல்கள், முக்கிய வரலாற்று குறிப்புகள், தொன்மை வரலாற்று சின்னங்கள் குறித்த புகைப்படங்கள், நாணயங்கள் உள்பட அருங்காட்சியக அம்சங்கள் அடங்கிய நடமாடும் அருங்காட்சியக வாகனம் மாநில தொல்லியல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம் வேலூா் அருங்காட்சியகத்துக்கு வந்தது. இந்த வாகனம் வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மாணவா்கள் பாா்வையிடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை பயணத்தைத் தொடங்கியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT