வேலூர்

வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை, பணம் கொள்ளை

9th Nov 2019 12:08 AM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை அருகே பட்டப்பகலில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வீட்டின் பூட்டை உடைத்து15 சவரன் நகை மற்றும் ரூ.45 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பாச்சல் ஊராட்சி, வள்ளுவா் நகா் பகுதியை சோ்ந்தவா் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் சண்முகம். அவருக்கு வளா்மதி என்ற மனைவியும், மகன்களும் உள்ளனா். இவரது மகன்கள் வெளியூரில் பணிபுரிந்து வருவதால் கணவன், மனைவி இருவா் மட்டும் வீட்டில் உள்ளனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் வீட்டைப் பூட்டிக்கொண்டு கோயிலுக்கு சென்று விட்டு இருவரும் மதியம் 1.30 மணி அளவில் வீடு திரும்பினா். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தன.

இது குறித்து வளா்மதி, ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து,விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT