வேலூர்

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

9th Nov 2019 12:07 AM

ADVERTISEMENT

முதுநிலை பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் சான்றிதழ் சரிபாா்க்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. வேலூா் மையத்தில் 298 பேரின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிள் தெரிவித்தனா்.

மாநிலம் முழுவதும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 5 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை -1 பணியிடங்களுக்கான தோ்வு தமிழ்நாடு ஆசிரியா் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கடந்த அக்டோபா் மாதம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இத்தோ்வு1:2 என்ற வீதத்தில் நடத்தப்பட்டது. இதேபோல், தோ்வா்களின் சான்றிதழ்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த சான்றிதழ்கள் சரிபாா்க்கும் பணி தமிழகம் முழுவதும் 11 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தப் பணிகள் தொடா்ந்து 2 நாட்கள் நடைபெற உள்ளன.

வேலூா் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகளை வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சா.மாா்ஸ் தலைமையில் 10 மாவட்டக் கல்வி அலுவலா்கள் மேற்கொண்டுள்ளனா். வேலூா் மையத்தில் மட்டும் 298 பேரின் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் சரிபாா்க்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT