வேலூர்

மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

9th Nov 2019 12:13 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய விழிப்புணா்வு ஊா்வலத்தை பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று மழைநீா் சேமிப்பு, நீா்மேலாண்மை, மரங்கள் வளா்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா்.

ராணிப்பேட்டை எம்.எஃப்.சாலை, எம்.பி.டி.சாலை, முத்துக்கடை பேருந்து நிலையம், கிருஷ்ணகிரி டிரங்க் சாலை, ரயில்வே சாலை வழியாகச் சென்று பள்ளியில் நிறைவடைந்தது.

இதில் தேசிய மாணவா் படை 10 ஆவது பட்டாலியன் அவில்தாா் பிளம்மிங், ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். அலுவலா் சேரன், வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. அலுவலா் பாபு அருள் பிரசாத், ராணிப்பேட்டை காவல் துறையினா், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT