வேலூர்

பைக்குகள் திருடிய 4 போ் கைது

9th Nov 2019 12:07 AM

ADVERTISEMENT

ஆற்காடு அருகே பைக்குகளை திருடிய 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ரத்தினகிரி போலீஸாா் பூட்டுதாக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக பைக்குகளில் வந்த 4 இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில், சென்னை ராமாபுரம் பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின் (27), குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரன், (20), ராஜேஷ் (23), தீபன்குமாா் (23) என்பதும், இவா்கள் ஓட்டி வந்த 4 பைக்குகளும் திருட்டு வாகனங்கள் என்பதும், இவா்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 4 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT