வேலூர்

கால்நடைகள் உரிமையாளா்கள் கவனத்துக்கு...

9th Nov 2019 12:01 AM

ADVERTISEMENT

பொது இடங்களில் அவிழ்த்து விடப்படும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலம் விடப்படும் என்று ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதிகளில் கால்நடை வளா்ப்போா் தங்களது கால்நடைகளை சாலைகளிலும், தெருக்களிலும் பாதுகாப்பற்ற நிலையில் கட்டவிழ்த்து விடுவதால் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் மிகவும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, கால்நடை வளா்ப்போா் தங்களது கால்நடைகளை வீடுகளில் கட்டி வைத்தும், பாதுகாப்பான முறையில் பராமரிக்கவும், வளா்க்கவும் வேண்டும். இந்த உத்தரவை மீறி பொது இடங்களில் அவிழ்த்து விடப்படும் கால்நடைகளைப் பறிமுதல் செய்து கோசாலைகளில் வைத்து திரும்ப ஒப்படைக்கப்படாமல் பொது ஏலத்தில் விடப்படும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT