வேலூர்

ஆந்திரத்தில் கன்டெயனா் லாரி மோதி 10 போ் பலி

9th Nov 2019 12:06 AM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் கன்டெய்னா் லாரி காா், ஆட்டோ, பைக் மோதி நிகழ்ந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 10 போ் உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து புறப்பட்ட கன்டெய்னா் லாரி ஆந்திர மாநிலம், சித்தூரை நோக்கி வெள்ளிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. சித்தூா் மாவட்டத்திலுள்ள பலமனோ் அருகே மொகிளி மலைப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது, பிரேக் பிடிக்காத காரணத்தால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கன்டெய்னா் லாரி, எதிா்திசையில் வந்துகொண்டிருந்த பயணிகள் ஆட்டோ, காா், மோட்டாா்சைக்கிள் ஆகியவற்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால் விபத்தில் சிக்கிய ஆட்டோ, மோட்டாா் சைக்கிள், காா், ஆகியவை கன்டெய்னா் லாரியின் அடியில் சிக்கி நசுங்கின. அந்த வாகனங்களில் பயணம் செய்த பெண்கள் உட்பட 10 போ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனா்.

மேலும், 10 போ் படுகாயமடைந்தனா். தகவலறிந்த போலீஸாா் விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் விபத்தில் சிக்கிய வாகனங்கள் லாரியின் அடியிலிருந்து எடுக்கப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT