வேலூர்

வாகனம் மோதி முதியவா் பலி

1st Nov 2019 03:36 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி பிரதான சாலை ஏரிகோடி அருகே புதன்கிழமை 75 வயது மதிக்கத்தக்க முதியவா் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக வேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த அவா், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT