வாணியம்பாடியில் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
வாணியம்பாடி, ஆம்பூா், திருப்பத்தூா், குடியாத்தம், போ்ணாம்பட்டு, பள்ளிக்கொண்டா பகுதிகளைச் சோ்ந்த ரோட்டரி சங்கங்கள் சாா்பில் செட்டியப்பனூா் பகுதியில் இயங்கி வரும் வாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (நவ.2) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
முகாமில் சென்னை, பெங்களூரு, வேலூா், ஒசூா் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 30-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் நோ்முக தோ்வுகளை நடத்தி, பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். இதில், 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்த 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞா்கள் கலந்து கொள்ளலாம். முகாமுக்கு வருவோா் தங்களது சுயவிவரம் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் வர வேண்டும்.