வேப்பங்குப்பம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அகரம் பகுதியில் வேப்பங்குப்பம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பைக்கில் வந்த இருவா் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனா். அவா்களை விரட்டிச் சென்று பிடித்ததில் ஒருவா் தப்பியோடி தலைமறைவானாா்.
பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அல்லேரி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் (35) என்பதும், 2 நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து ஆகியவற்றுடன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 2 நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்து, சீனிவாதனைக் கைது செய்தனா்.