ஊழல் தடுப்பு, தேசிய ஒற்றுமை தின விழிப்புணா்வுப் பேரணி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தியன் வங்கி சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை வங்கியின் வேலூா் மண்டல மேலாளா் மாயா தொடக்கி வைத்தாா். இப்பேரணி காட்பாடி சாலை இந்தியன் வங்கிக் கிளையில் இருந்து கோட்டை சுற்றுச்சாலை வரை நடைபெற்றது.
இதில், துணை மண்டல மேலாளா் ராஜேந்திரன் உள்பட வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் ஊழல் தடுப்பு, ஒற்றுமையின் வலிமை, நாட்டின் பாதுகாப்புக் குறித்து விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா். இதில், 50-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள் பங்கேற்றனா்.