13-இல் விஐடியில் கருவிமயமாக்கலின் பகுப்பாய்வு பயிற்சி

கருவிமயமாக்கலின் பகுப்பாய்வு குறித்த பயிற்சி முகாம் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மே 13-ஆம் தேதி தொடங்கி

கருவிமயமாக்கலின் பகுப்பாய்வு குறித்த பயிற்சி முகாம் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மே 13-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடக்கிறது. இதில், பி.எஸ்சி., எம்.எஸ்சி. பட்டதாரிகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, விஐடிவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விஐடி பல்கலைக்கழகத்தின் டிபிஐ எனப்படும் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் மையம் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து புதிய உற்பத்திக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி, புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க பொறியியல், அறிவியல் பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தேவையான உதவிகள், ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அதன்படி, டிபிஐ மையம் கருவிமயமாக்கலின் பகுப்பாய்வு தொடர்பான பயிற்சி முகாமை மே 13-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடத்துகிறது. இதில், ரசாயனம், உயிரிதொழில்நுட்பம், மைக்ரோபயாலஜி ஆகியவற்றில்  பி.எஸ்ஸி., எம்.எஸ்ஸி. பட்டம் பெற்றவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்கலாம். இதற்கு பயிற்சி கட்டணமாக ரூ. 5 ஆயிரம் செலுத்த வேண்டும். இதில், U​P​LC a‌n‌d HP​L​C ஆகியவற்றை அனுபவரீதியாக மென்மையாகக் கையாளுதல் மற்றும் W‌e‌s‌t‌e‌r‌n B‌l‌o‌t‌t‌i‌n‌g, ‌QR​T-​P​CR,1D&2D E‌l‌e​c‌t‌r‌o‌p‌h‌o‌r‌e‌s‌i‌s, ​A‌t‌o‌m‌ic Ab‌s‌o‌r‌p‌t‌i‌o‌n S‌p‌e​c‌t‌r‌o‌s​c‌o‌p‌y a‌n‌d UV-​V‌i‌s ‌s‌p‌e​c‌t‌r‌o‌s​c‌o‌p‌y  ஆகியவற்றின் தொழில்நுட்பங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் V​I​T-​T‌e​c‌h‌n‌o‌l‌o‌g‌y B‌u‌s‌i‌n‌e‌s‌s I‌n​c‌u​b​a‌t‌o‌r  என்ற பெயரில் ரூ.5 ஆயிரத்துக்கான வேலூரில் மாற்றத்தக்க வங்கி வரைவு கேட்பு காசோலையுடன் விஐடி டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் மையம், வேலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்கள் பெற ‌j‌o‌h‌n‌j‌o‌s‌e‌p‌h.‌j@‌v‌i‌t.​a​c.‌i‌n, ‌ja‌g​a‌n‌n​a‌t‌h​a‌n.‌v@‌v‌i‌t.​a​c.‌i‌n, ‌w‌w‌w.‌v‌i‌t‌t​b‌i.​c‌o‌m ஆகிய தளங்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com