ரயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்பு போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஆம்பூர் ரயில் நிலையத்தில் சென்னை-பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் சவுந்தரராஜன் தலைமையில் போலீஸார் நடத்திய சோதனையில் 800 கிலோ எடை கொண்ட 24 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்து, வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.