வேலூர்

பூட்டிய வீட்டில் 10 சவரன் நகை திருட்டு

29th Jun 2019 11:48 PM

ADVERTISEMENT


குடியாத்தம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகைகள் திருடப்பட்டன.
நெல்லூர்பேட்டை 2-ஆவது நீலிக்கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வருமான வரித் துறை அலுவலர் காசிநாதன் (60). இவர், கடந்த 22-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றாராம். வெள்ளிக்கிழமை இரவு வந்து பார்த்தபோது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 10 சவரன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச்  சென்றது தெரிந்தது. 
இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT