வேலூர்

சன்பீம் பள்ளியில் சாதனை விருது நிகழ்ச்சி: சைலேந்திரபாபு பங்கேற்பு

30th Jul 2019 07:53 AM

ADVERTISEMENT

காட்பாடி சன்பீம் பள்ளியில் நடைபெற்ற ஐ.ஐ.டி. அட்வான்ஸ் விருது, அரசுப் பள்ளிகளுக்கான சாதனை விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக ரயில்வே காவல் துறைத் தலைவர் சி.சைலேந்திரபாபு பங்கேற்று விருதுகளை வழங்கினார்.  
அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கான ஊக்கமூட்டல் நிகழ்ச்சி காட்பாடி சன்பீம் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ரயில்வே காவல் துறைத் தலைவர் சி.சைலேந்திரபாபு பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு அறிவுரை வழங்கிப் பேசினார். 
மேலும், சன்பீம் பள்ளிகளின் 30 முதன்மை மாணவ, மாணவிகளுக்கு வெற்றிக் கேடயங்களும், ஆசிரியர்கள் 20 பேருக்கு நல்லாசிரியர் விருதும், மற்ற பணியாளர்கள் 20 பேருக்கு சிறப்பு விருதுகளும், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் மாணவன் வின்ஸ்டர், காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  முதல் மாணவி கீர்த்தனா ஆகியோருக்கு தலா ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கினார். 
மேலும், ஐ.ஐ.டி. அட்வான்ஸ் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 3-ஆம் இடம் பிடித்த மாணவன் பூர்ண ஷியாம சுந்தர், உலக சாதனை படைத்த ஏழாம் வகுப்பு மாணவன் அபிலாஷ் ஆகியோருக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
முன்னதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், தொடக்க உரையாற்றினார். பள்ளித் தலைவர் ஹரிகோபாலன் தலைமை வகித்தார். தாளாளர் தங்கப்பிரகாஷ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவி ஷிவானி வரவேற்றார். இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT