வேலூர்

கார் மோதி மூதாட்டி பலி

29th Jul 2019 07:31 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அருகே கார் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார். 
கேத்தாண்டப்பட்டி  ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரி (70). இவர், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து புத்துக்கோயில் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 
தேசிய நெடுஞ்சாலையில் ஜீவா நகர் மின்வாரிய அலுவலகம் எதிரே சாலையைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக வேகமாகச் சென்ற கார் மோதியதில் சுந்தரி பலத்த காயமடைந்தார். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். 
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பெங்களூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கார்த்திக்கை (20) கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT