வேலூர்

வேலூர் மக்களவைத் தேர்தல்: வாக்குச் சாவடி மையத்தை  பார்வையிட்ட தேர்தல் பார்வையாளர்கள்

22nd Jul 2019 07:10 AM

ADVERTISEMENT

ஆம்பூரில் வாக்குப் பதிவு நடைபெற உள்ள வாக்குச் சாவடி மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற  உள்ளது.  அதை முன்னிட்டு, ஆம்பூர் மஜ்ஹருல் உலூம்  கல்லூரியில்  உள்ள  வாக்குச்சாவடி மையத்தை மக்களவைத் தொகுதி தேர்தல் பார்வையாளர் சுதம் காதே பண்டரிநாத், காவல் பார்வையாளர் ஆதித்யா குமார் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
வாக்குச்சாவடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT