வேலூர்

பைக் மீது கார் மோதல்: ஓட்டுநர் பலி

22nd Jul 2019 07:15 AM

ADVERTISEMENT

அரக்கோணம் அருகே பைக் மீது கார் மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார். 
குப்புகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (58). இவர், ஸ்ரீபெரும்புதூரில் தனியார் ஆலைப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். 
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பைக்கில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். வேடல் அருகே சென்றபோது, எதிரே அரக்கோணம் நோக்கிச் சென்ற கார் மோதியதில் வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அரக்கோணம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT