வேலூர்

திருவள்ளுவர் பல்கலை. வளாக நேர்காணலில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை

22nd Jul 2019 07:14 AM

ADVERTISEMENT

திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாக நேர்காணலில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். தாமரைச்செல்வி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
பல்கலைக்கழக வேலைவாய்ப்புத் துறை சார்பில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற வளாக நேர்காணல் கடந்த 18-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பவியல் இறுதி ஆண்டு மாணவர்கள் மோ.ரோமியோ, செ.தேவா, முன்னாள் மாணவர்கள் பி.சுந்தரேசன், ரா.ஏழுமலை ஆகிய 4 பேரை கோவாவைச் சேர்ந்த மால்பயோ என்ற நிறுவனம் தேர்வு செய்தது. மேலும், 10 மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்ற தேர்வாகினர். 
வளாக நேர்காணலில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை துணைவேந்தர் எஸ்.தாமரைச்செல்வி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
பல்கலைக்கழக வேலை வாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளரும், உயிரி தொழில்நுட்பவியல் உதவிப் பேராசிரியருமான அ.ராஜசேகர், பேராசிரியர்கள் எஸ். விஜய ஆனந்த், டி. திருமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT