வேலூர்

திருமணமாகி 5 நாள்களில் இளம்பெண் தற்கொலை

22nd Jul 2019 07:15 AM

ADVERTISEMENT

திருப்பத்தூர் அருகே திருமணமாகி 5 நாள்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
சீரங்கம்பட்டியைச் சேர்ந்த சங்கரின் மகள் சந்தியா (19). இவருக்கும், கதிரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கெளசிக்குக்கும் (25) கடந்த 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு சந்தியா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தினார். தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் கிராமிய போலீஸார் சடலத்தை மீட்டு,  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 5 நாள்களில் சந்தியா தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக திருப்பத்தூர் சார்-ஆட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT