வேலூர்

சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிப்பு

22nd Jul 2019 07:14 AM

ADVERTISEMENT

அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டையில், நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினத்தையொட்டி, சிவாஜி ரசிகர் மன்றத்தினர் அங்குள்ள அவரது உருவச் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வேலூர் மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றத் துணைத் தலைவர் ஆர்.மணி தலைமை வகித்து, சிவாஜி கணேசனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். இச்சிலைக்கு அருகே உள்ள காமராஜர் உருவச் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. 
குருவராஜபேட்டை சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் எஸ்.ஆனந்தன், செயலர் கே.எஸ்.சொக்கலிங்கம், பொருளாளர் பி.எஸ்.தாமோதரன், பிரபு நற்பணி மன்ற தலைவர் எம்.மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT