வாணியம்பாடி முழு நேர கிளை நூலகத்தில் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 400 பேர் நூலக உறுப்பினர்களாகச் சேர்த்தனர்.
காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்த நூலகத்தில் வாணியம்பாடி இந்து மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 400 பேர் திங்கள்கிழமை உறுப்பினராகச் சேர்ந்தனர். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் கருணாகரன், தமிழ் ஆசிரியர் கோடீஸ்வரன், நூலக வாசகர் வட்டத் தலைவர் நடராஜன், வாசகர் வட்ட உறுப்பினர் பார்த்திபன், நூலகர்கள் மணிமாலா, விஜயகுமார், ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனிடையே, வாணியம்பாடியை அடுத்த தெக்குப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகக் குழுவின் தலைவர் சிவசங்கரி முன்னிலை வகித்தார். இதில் காமராஜர் பற்றிய பாடல், கவிதைகளை மாணவர்கள் பாடினர். மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.