ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவானது ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, யாக சாலை பூஜை, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலஷ்மி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து, திங்கள்கிழமை காலை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.