வேலூர்

வேலூர் கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் கூட்டம்

15th Jul 2019 12:17 AM

ADVERTISEMENT

அரக்கோணம் சுவால்பேட்டையில் வேலூர் கிழக்கு மாவட்ட பாமக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மாவட்டத் தலைவர் ப.ஜெகந்நாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அ.ம.கிருஷ்ணன் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலர் க.சரவணன், மாநில மாணவரணிச் செயலர் ப.பிரபு, தலைமைப் பேச்சாளர் தம்பி ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் மு.மணி, மாநில இளைஞரணி துணை அமைப்புச் செயலர் கோ.ஏழுமலை, மாவட்ட துணைச் செயலர் சி.ஜி.ராமசாமி, நகரச் செயலர் கே.எம்.ரமேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அன்புமணி ராமதாஸை மாநிலங்களவை உறுப்பினராக்கியதற்காக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தல், ஜூலை 25-ஆம் தேதி கட்சியின் நிறுவனர் ராமதாஸின் 75-ஆவது பிறந்த நாள் விழா, கட்சியின் 30-ஆண்டு நிறுவன நாள் விழா ஆகியவற்றை சிறப்பாகக் கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT