மாதனூர் அருகே வாகனம் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
மேல்பட்டி லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தசாமி (55). மாதனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது வேலூர் நோக்கிச் சென்ற வாகனம் மோதியது. இதில் கோவிந்தசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த ஆம்பூர் கிராமிய போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.