வேலூர்

மக்களவைத் தேர்தல்:  7 ஆயிரம் பேருக்கு முதல்கட்ட பயிற்சி

15th Jul 2019 12:23 AM

ADVERTISEMENT

வேலூர் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 7 ஆயிரம் அலுவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 1,553 வாக்கு வாக்குச் சாவடிகளில் புணிபுரிய உள்ள 7,757 வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு 6 பேரவைத் தொகுதி பயிற்சி மையங்களில் முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. 
பயிற்சி வகுப்பு நடக்கும் வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரி, அரியூர் ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையங்களில் மாவட்ட ஆட்சியர் அ. சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
சார்-ஆட்சியர் கா.மெகராஜ், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடி, வட்டாட்சியர்கள் ரமேஷ், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT