அமமுக, திமுக கட்சிகளில் இருந்து விலகிய நிர்வாகிகள் அமைச்சர் நிலோபர் கபீல் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
வாணியம்பாடி தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரச் செயலர் சதாசிவம் தலைமை வகித்தார். நாட்டறம்பள்ளி ஒன்றியச் செயலர் ராஜா, மாவட்டப் பிரதிநிதி பிரகாசம், நகரப் பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலர் சதீஷ்குமார் வரவேற்றார்.
மாநிலத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் முன்னிலையில் அமமுகவைச் சேர்ந்த ஊராட்சி செயலர் பாபு, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலர் ஸ்ரீதரன், அவைத் தலைவர் லோகாநாதன், திமுகவைச் சேர்ந்த கிளைச் செயலர் பாலாஜி, ஊராட்சிச் செயலர் முருகேசன் உள்ளிட்ட 50 பேர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து வாணியம்பாடி தொகுதியில் தேர்தல் பிரசார வாகனங்களை கொடியைசத்து பிரசாரத்தைத் தொடக்கி வைத்தார்.
அதிமுக நிர்வாகிகள் அருண், தென்னரசு, லிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.