வேலூர்

அரசு மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினம்

12th Jul 2019 04:20 AM

ADVERTISEMENT


வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தின விழா வியாழக்கிழமை  கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, மருத்துவ அலுவலர் அம்பிகா தலைமை வகித்தார். மருத்துவர்கள் லட்சுமணன், சிவசுப்பிரமணியன், சத்யராஜ் நேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் செந்தில் வரவேற்றார். 
நிகழ்ச்சியில், கர்ப்பிணிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பின்னர், மருத்துவர்கள், செவிலியர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள், குடும்ப நல முறைகள், முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் 3 ஆண்டுகள் இடைவெளி விடுதல், தாய்-சேய் நலம், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 
தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ அலுவலர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். பின்னர், மருத்துவ அலுவலர் அம்பிகா பேசுகையில், தற்போது உலகின் மக்கள் தொகை 770 கோடி. இது 2030-ஆம் ஆண்டில் 850 கோடியாக உயரும். 
இந்தியாவில் தற்போதுள்ள 130 கோடி மக்கள் தொகையானது, 2030-ஆம் ஆண்டில்150  கோடியாக மாறும் நிலை உள்ளது. இப்போதிருந்தே மக்கள் தொகை வீக்கத்தை குறைத்துக் கொள்ள பெற்றோர் 2 பிள்ளைகளுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், அப்போது தான் ஆரோக்கியமான குழந்தைகளாக வளர்க்க முடியும் என கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில், மருத்துவர்கள் ஃபர்ஹான், தமிழ்ச்செல்வி, இளவேனில் உள்பட  மருத்துவர்கள், செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT