ஒடுக்கத்தூர் வனச்சரகத்தைச் சேர்ந்த வனத்துறையினர் பள்ளிகொண்டா வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
வனச்சரக அலுவலர் பி.பாலாஜி, வனவர் என்.பிரதீப்குமார் ஆகியோர் பள்ளிகொண்டா காப்புக் காட்டில் ஏரிப்புதூர் பகுதியில் திடீர் சாராய தடுப்பு சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபர்கள் வனத்துறையினரை கண்டதும் தப்பியோடி விட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற சாராய பாக்கெட்டுகளை வனத்துறையினர் தீயிட்டு எரித்தனர். தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.