வேலூர்

வணிகர் பிரதிநிதியை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க வலியுறுத்தல்

4th Jul 2019 07:34 AM

ADVERTISEMENT

மத்திய, மாநில அரசுகளின் வருவாய்க்கு பெரிதும் காரணமாக விளங்கும் வணிகர்களின் பிரதிநிதி ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்து, வணிகர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசை குடியாத்தம் நகர நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் என். இ.கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் டி.ராஜேந்திரன் வரவேற்றார். நிர்வாகிகள் எம்.அருள்பிரகாசம், எம்.லெனின், எஸ். அன்பு, வி.சையத்ரகுமான், ஆர். கோபி, வி. பூபதி, மாரிசிவக்குமார், ஆர். லிங்கப்பா, எம்.ஐ. முதஸ்சீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் நீர் மேலாண்மைத் திட்டங்களை முனைந்து செயல்படுத்த வேண்டும், வீணாக கடலில் கலக்கும் காவிரி உபரிநீரை புதிதாக அணைகள், தடுப்பணைகள் கட்டி தேக்கி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணங்களை வரைமுறைப்படுத்த வேண்டும், அதேவேளையில் காலாவதியான சுங்கச் சாவடிகளை இனம் கண்டு உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT