வேலூர்

மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்

4th Jul 2019 07:33 AM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை  வழங்கக் கோரி மாணவர்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு மடிக்கணினிகளை வழங்கவில்லை.  இந்நிலையில் அரசு, தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அந்த மாணவர்கள் தங்களுக்கு தமிழக அரசு உடனடியாக விலையில்லா மடிக்கணினிகளை வழங்கக் கோரி ரயில்வே மேம்பாலத்தில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த குடியாத்தம் நகர போலீஸார் அங்கு சென்று அவர்களை சமரசம் செய்து அனுப்பினர். இதனால் குடியாத்தம்- பள்ளிகொண்டா சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆற்காட்டில்...
ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2017-2018-ஆம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை.
இதைக் கண்டித்து மாணவர்கள் பள்ளி முன்பு ஆற்காடு-கலவை சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர். 
இதையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் மாணவர்கள் மறியலைக் கைவிட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT