வேலூர்

பிரத்யங்கிரா தேவி கோயிலில் மகா நிகும்பலா யாகம்

4th Jul 2019 07:33 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் அமைந்துள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி, மகா நிகும்பலா யாகம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
கோயில் அறங்காவலர் பி.எஸ்.மணி தலைமையில் இரவு 7 மணியளவில் மகா கணபதி ஹோமத்துடன், மகா யாகம் தொடங்கியது. தொடர்ந்து, மகா சுதர்சன யாகம், மகா சண்டி யாகம், மகா வராஹி யாகம், பகளாமுகி யாகம் உள்ளிட்ட 21 யாகங்கள் நடைபெற்றன. 
பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் உலக நன்மை மற்றும் மழை வேண்டி மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது. இதையடுத்து மகா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT