வேலூர்

சிறையில் இருந்து தண்டனைக் கைதி தப்பியோட்டம்

4th Jul 2019 07:38 AM

ADVERTISEMENT

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதி புதன்கிழமை சிறையில் இருந்து தப்பிச் சென்றார். 
வேலூர் அருகே கலசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (38). இவர், பாலியல் வன்கொடுமை வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று கடந்த 2017-ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் இந்த ஆண்டு முதல் தோட்ட வேலைக்காக சிறைக்கு வெளியே உள்ள நிலத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை வழக்கம்போல் சிறைக்கு வெளியே உள்ள சிறை தோட்ட வளாகத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தார். மதியம் உணவு இடைவேளைக்காக சிறைக்கு திரும்பியபோது அவரைக் காணவில்லை. சிறைக் காவலர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததை அடுத்து இதுதொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ரமேஷை தேடி வருகின்றனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT