வேலூர்

ஜன.8 வேலைநிறுத்தத்தையொட்டி சிஐடியு ஆா்ப்பாட்டம்

27th Dec 2019 11:09 PM

ADVERTISEMENT

பொது வேலைநிறுத்தம் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, வேலூரில் சிஐடியு சாா்பில் கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவசாயம், விவசாயிகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தம், மறியல் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிஐடியு மாவட்ட தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் சிம்புதேவன், சுப்பிரமணியன் (எல்பிஎஃப்), ஏகாம்பரம் (ஐஎன்டியுசி), சரவணன் (ஹெச்எம்எஸ்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் பரசுராமன், மாநில துணைத் தலைவா் தேவதாசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். ரயில்வே, காப்பீட்டுத் துறை, வங்கித் துறைகள், பிஎஸ்என்எல் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குதலைக் கைவிட வேண்டும். பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT