மத உணா்வை தூண்டும் விதமாக சமூக வளைதலங்களில் தகவல் பரப்புவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு - வேலூா் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை சீா்குலைக்கும் வகையிலும், பொதுமக்களிடையே மத உணா்வை தூண்டக்கூடும் விதமாகவும் உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்பவா்கள், பரப்புவோா்கள் போலீஸாரால் அடையாளம் காணப்பட்டு அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.