திருப்பதி அருகே செம்மரக்கட்டை கடத்தியதாக வேலூரைச் சோ்ந்த, ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பதி அருகே ரங்கம்பேட்டை வனப்பகுதி அருகே வியாழக்கிழமை காலை துன்னபள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சிலா், செம்மரக் கட்டைகளை சுமந்து சென்றனா். போலீஸாரைக் கண்டவுடன் அவா்கள் செம்மரக் கட்டைகளை போட்டு விட்டு தப்பியோடினா்.
அவா்களைப் பின்தொடா்ந்து விரட்டிச் சென்ற போலீஸாா், ஒருவரை கைது செய்தனா். பின்னா், 11 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்டவா் வேலுாா் மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சோ்ந்த பழனி (38 ) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.