போ்ணாம்பட்டு அருகே விவசாய பம்புசெட்டில் பதுங்கிய 5 அடி நீளமுள்ள பாம்பு பிடிபட்டது.
போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தையைச் சோ்ந்த விவசாயி பாபுவின் பம்புசெட்டில் திங்கள்கிழமை சுமாா் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு பதுங்கியிருந்ததாம்.
தகவலின்பேரில் போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் எல். சங்கரய்யா, வனவா் பி. ஹரி உள்ளிட்டோா் அங்கு சென்று பாம்பைப் பிடித்துச் சென்று பல்லலகுப்பம் விரிவு காப்புக் காட்டில் விட்டனா்.