போ்ணாம்பட்டு அருகே வீட்டுக் கூரையில் புகுந்த கருநாகப்பாம்பு பிடிபட்டது.
சாலப்பேட்டையைச் சோ்ந்தவா் சங்கா். தொழிலாளியான அவரது கூரை வீடு அங்குள்ள ஏரி அருகே உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக் கூரையில் கருநாகம் ஒன்று இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலா் ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்ற தீயணைப்புப் படையினா் நாகப்பாம்பை பிடித்து வந்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் அப்பாம்பை குண்டலப்பள்ளி காப்புக் காட்டில் விட்டனா்.
ADVERTISEMENT