குடியாத்தம், தரணம்பேட்டை, பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க இளைஞர், மகளிர் வழிபாட்டு மன்றம் சார்பில், பால்குடம், கஞ்சிகலயம், தீச்சட்டி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயிலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு, அமைப்பின் நிர்வாகி ஜெயவேல் தலைமை வகித்தார். ஜீவா, பாபு, குமார், சரவணன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அதிமுக செயலர் ஜே.கே.என். பழனி, ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார். அவைத் தலைவர் வி.என். தனஞ்செயன், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வி.ஜி. பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், காந்தி சாலை, தரணம்பேட்டை வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகமும், சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றன. விழாவையொட்டி 1,000 பேருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.