வேலூர்

ஆம்பூரில் கடும் பனி மூட்டம்

23rd Dec 2019 03:20 AM

ADVERTISEMENT

ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது.
 மார்கழி மாதத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு இருப்பது வழக்கம். மார்கழி மாதம் பிறந்து 5 நாள்கள் ஆன நிலையில் லேசான பனிப்பொழிவு தான் இருந்தது. 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை எதிரில் வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு ஆம்பூரில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
 ஆம்பூரில் காலை சுமார் 7.30 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டது. சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT